எரிசக்தி அமைச்சகம்

இந்திய- நேபாளம் கால்வாயின் குறுக்கணையில் நீர்வரத்தை ஒழுங்குபடுத்தும் பணி: தேசிய நீர் மின்சாரக் கழகத்தின் தலைவர் அடிக்கல் நாட்டினார்

Posted On: 08 DEC 2020 7:11PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தின் பன்பாஸாவில் அமைந்துள்ள தானக்பூர் எரிசக்தி நிலையத்தில் இந்திய- நேபாளம் கால்வாயின் குறுக்கணையில்  நீர்வரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு தேசிய நீர் மின்சாரக் கழகத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான திரு ஏ கே சிங் இன்று அடிக்கல் நாட்டினார். இந்தியா நேபாளம்,  நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட மகாகாளி ஒப்பந்தத்தின் கீழ் 1.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்தக் கால்வாய் அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு ஏ கே சிங், தேசிய நீர்மின்சாரக் கழகம், இந்தியாவின் நீர்மின்சார உற்பத்தியில் முன்னிலை வகிப்பதாகவும், திட்டமிடுதல் தொடங்கி, செயல்படுத்துவது வரையிலான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதோடு, சூரிய ஒளி சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டங்களிலும்  ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679160

 

****************


(Release ID: 1679176) Visitor Counter : 163