உள்துறை அமைச்சகம்

ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ள முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

Posted On: 08 DEC 2020 5:40PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ள முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு  வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ள முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். சுமூக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் அளித்து, முதலீடு செய்வதற்கு விரும்பத்தக்க இடமாக இந்தியாவை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சோர்வறியாத நடவடிக்கைகளையும் தொலைநோக்குத் தலைமையையும் இந்த சாதனை எதிரொலிக்கிறது”, ன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679123

**********************


(Release ID: 1679138) Visitor Counter : 213