அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமைகளை புகுத்தி நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு தலைமை ஏற்குமாறு இளம் விஞ்ஞானிகளுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தல்

Posted On: 03 DEC 2020 3:49PM by PIB Chennai

சமீபத்தில் நிறைவடைந்த ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பல்வேறு துறைகளுக்கு உதவக்கூடிய புதுமையான சிந்தனைகளை இளம் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டார்கள்.

வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்; உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிரிப் பொறியியல்; ஆராய்ச்சி மற்றும் புதுமைகளின் மூலம் கொவிட் மற்றும் இதர பெருந்தொற்றுகளை எதிர்கொள்ளுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேலாண்மை ஆகிய துறைகளில் தங்களது சிந்தனைகளை இளம் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், புதுமைகளை புகுத்தி, காப்புரிமை பெற்று, உற்பத்தி செய்து, வளமடைந்து, நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு தலைமை ஏற்குமாறு இளம் விஞ்ஞானிகளை வலியுறுத்தினார்.

அறிவியலின் துணை கொண்டு சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை விஞ்ஞானிகள் உயர்த்த வேண்டும் என்றும், இதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றும் அமைச்சர் கூறினார்.

புதுமையான ஆராய்ச்சி பணிகளுக்காகவும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளோடு அவர்கள் பணிபுரிய விரும்பும் சிந்தனைகளுக்காகவும், 22 இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மெய்நிகர் தளத்தில் நடத்தப்பட்ட ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678026


(Release ID: 1678100)