அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 போன்ற சூழலை இனிமேல் எதிர்கொள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு கொள்கை எவ்வாறு உதவ முடியும் என்று நிபுணர்கள் ஆலோசனை

Posted On: 03 DEC 2020 3:49PM by PIB Chennai

கொவிட்-19 போன்ற சூழலை, எதிர்காலத்தில் எதிர்கொள்ள தயாராவதற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு (எஸ்டிஐபி) கொள்கை, நாட்டுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து மெய்நிகர் கருத்தரங்கில் நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பொன் விழாவை முன்னிட்டு பல தொடர் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எஸ்டிஐபி 2020 கொள்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

கருத்தரங்கில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் சரஸ்வத் கூறியதாவது:

நெருங்கிய உறவினர்களின் உயிரிழப்பு, வாழ்வாதாரம் இழப்பு, உலக பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது ஆகியவை மூலம் கொவிட் நெருக்கடி ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. அதே நேரத்தில் நமது நடைமுறைகளை மறு ஆய்வு செய்யவும் வைத்தது.

வளரும் நாடுகள் பொருளாதாரத்தை மீட்க தற்சார்பு என்ற முறையை பின்பற்றும் வாய்ப்பை வழங்கியது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பின் பயன்பாடு, கொவிட் -19 போன்ற இடையூறுகளை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியியல் தொழில்நுட்ப துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா பேசுகையில், ‘‘எதிர்காலத்தில் கொவிட் -19 போன்ற சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டை தற்சார்புடையதாக்கவும் எஸ்டிஐபி உதவும். அறிவை பகிர்ந்து கொள்ளவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும் எஸ்டிஐபி கொள்கை உதவும்’’ என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678025


(Release ID: 1678080) Visitor Counter : 206