வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ரூ.200 கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்கள் லக்னோ மாநகராட்சி வெளியீடு
Posted On:
02 DEC 2020 11:32AM by PIB Chennai
மும்பை பங்குச் சந்தையில் ரூ.200 கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்களை, லக்னோ மாநகராட்சி இன்று வெளியிட்டது.
மும்பை தேசிய பங்குச் சந்தையில் நடந்த இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அம்ருத் திட்டத்தின் கீழ் பங்கு பத்திரங்களை வெளியிடும் 9வது நகரம் லக்னோ மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிடைக்கும் ரூ.26 கோடியை, கடன் வட்டியை குறைப்பதற்கு லக்னோ மாநகராட்சி பயன்படுத்தவுள்ளது.
இதன் மூலம் லக்னோ மாநகராட்சியின் கடன் வட்டி 2 சதவீதம் குறையும், அதன் நிதி நிலையும் மேம்படும். லக்னோ தற்சார்பு நகரமாக இது வழிவகுக்கும்.
இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், வாரணாசி, ஆக்ரா, கான்பூர் ஆகிய நகரங்களும் வரும் மாதங்களில் பங்கு பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்ருத் திட்டத்தின் கீழ், வட இந்தியாவில் இருந்து பங்கு பத்திரங்களை வெளியிடும் முதல் மாநகராட்சி என்ற பெருமை லக்னோவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677604
*****
(Release ID: 1677604)
(Release ID: 1677676)
Visitor Counter : 196