சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கிடையேயான உயர்மட்ட குழுவை அரசு அமைத்தது

Posted On: 02 DEC 2020 1:11PM by PIB Chennai

பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் சொன்னதை செய்யும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தும் மற்றுமொரு முடிவாக, பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கிடையேயான உயர்மட்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் அமைத்துள்ள இந்த குழுவின் தலைவராக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் செயலாளர் இருப்பார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உருவாக்கி, தேசிய அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ள பங்களிப்பு உட்பட பாரிஸ் ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்புகளை சரியான நேரத்தில் இந்தியாவை பூர்த்தி செய்ய வைப்பதே இந்த குழுவின் நோக்கமாகும்.

14 அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த உயர்மட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். தேசிய அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ள பங்களிப்புகளையும், பாரிஸ் ஒப்பந்தத்தின் தேவைகளை நிறைவேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளையும், அவ்வப்போது கண்காணித்து, ஆய்வு செய்து இந்த குழு வழிகாட்டும்.

 

பாரிஸ் ஒப்பந்தத்தின் ஆறாவது அம்சத்தின் படி, இந்திய கரியமில வாயு வெளியேற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்களுக்கான சந்தைகளின் தேசிய ஒழுங்குமுறையாளராகவும் இக்குழு இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677630

********

 

(Release ID: 1677630)




(Release ID: 1677662) Visitor Counter : 299