நிதி அமைச்சகம்

முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தொடர்கிறது

Posted On: 01 DEC 2020 4:32PM by PIB Chennai

உலகெங்கிலும் உள்ள அனைத்து பொருளாதாரங்களையும் கொவிட்-19 வெகுவாக பாதித்து, தேவை மற்றும் விநியோக சங்கிலிகளை கடுமையாக பாதித்திருக்கிறது.

இருந்த போதிலும், இந்திய அரசின் தொடர் மற்றும் செயல்மிகு இடையீடுகளின் காரணமாக, உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியாவில் செய்யப்பட்டு வரும் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அந்நிய பங்கு முதலீடுகள், அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் பெருநிறுவன பத்திர முதலீடுகள் ஆகியவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

2020 நவம்பர் மாதத்தில் ரூபாய் 62,782 கோடி மதிப்பிலான அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடுகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன.

நிதி ஆண்டு 2020-21 செப்டம்பர் மாதம் வரை $30,004 மில்லியன் நேரடி அந்நிய முதலீடு, பங்குகளில் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 15 சதவீதம் அதிகமாகும்.

நிதியாண்டு 2021-இன் முதல் அரையாண்டில், ரூபாய் 4.43 லட்சம் கோடி மதிப்பிலான பெருநிறுவன பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட பத்திரங்களின் மதிப்பான ரூபாய் 3.54 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது, இது 25 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677388

----



(Release ID: 1677497) Visitor Counter : 205