இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

வில்வித்தை வீரர் திரு கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி

Posted On: 30 NOV 2020 12:38PM by PIB Chennai

புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் நடைபெற்றுவரும் தேசிய வில்வித்தை பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள  வீரர் திரு கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. திரு கபில், தொடர்ந்து மருத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

18 நாட்கள் விடுமுறையில் இருந்து மீண்டும் பயிற்சி முகாமிற்கு திரும்புகையில், இந்திய விளையாட்டு ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரு கபிலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தனிமையில் இருந்த அவர், பயிற்சி முகாமில் உள்ள எவருடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677117



(Release ID: 1677203) Visitor Counter : 106