நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விருப்பத் தேர்வு-1-ஐ பஞ்சாப் தேர்ந்தெடுத்துள்ளது, சிறப்பு சாளரம் மூலம் தமிழகத்திற்கு ரூ 1816.66 கோடி வழங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2020 2:39PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1- தேர்ந்தெடுத்திருப்பதாக பஞ்சாப் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விருப்பத் தேர்வு-1- தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1- தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருப்பத் தேர்வு-1- தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 24,000 கோடியை கடனாக வாங்கி, அதை நான்கு தவணைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

 சிறப்பு சாளரத்தின் மூலம் ரூபாய் 9627 கோடி கடனாகப் பெற தமிழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, ரூபாய் 1816.66 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676701

------


(வெளியீட்டு அடையாள எண்: 1676758) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Telugu