நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
அரசியலமைப்பு தினத்தன்று கேவாடியாவில் நடைபெற்ற சிறப்பு கண்காட்சிக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டு
Posted On:
27 NOV 2020 1:56PM by PIB Chennai
நாட்டின் 71-வது அரசியலமைப்பு தினம், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் அரசியல் சாசனத்தின் முன்னுரையை வாசித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், கேவாடியாவில் இது குறித்து நடைபெற்ற சிறப்பு கண்காட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பாராட்டை பெற்றது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கள விளம்பர அலுவலகம், நாடாளுமன்ற அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்துடன் இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அகில இந்திய சட்டமன்ற தலைவர்களின் 80-வது மாநாட்டையொட்டி குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிறப்பு கண்காட்சியை, மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா புதன்கிழமை அன்று திறந்து வைத்தார்.
பண்டைய காலத்திலிருந்து நவீன இந்தியா வரை, நமது நாட்டின் ஜனநாயக பண்பாட்டின் பயணத்தை இந்த கண்காட்சி அழகுற வெளிப்படுத்தி இருந்தது.
1,600 சதுர அடியிலான இந்த மல்டி மீடியா கண்காட்சியில், பிளாஸ்மா டிஸ்ப்ளே, டிஜிட்டல் புத்தகம், ரேடியோ அலைகளை கண்டுபிடித்து வாசிக்கும் கருவி, உரையாடும் திரை மற்றும் டிஜிட்டல் தொடு சுவர் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இக்கண்காட்சியில் மல்டிமீடியாவின் பயன்பாட்டை பாராட்டிய மக்களவை சபாநாயகர், இத்தகைய கண்காட்சிகள் தகவல்களை தெரிவிப்பதை சுவாரசியமாக்குகின்றன என்றார்.
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் கண்காட்சியை பார்வையிட்டு மிகவும் பாராட்டினார். மத்திய அமைச்சர்கள் திரு பிரகலாத் ஜோஷி மற்றும் திரு அர்ஜுன் ராம் மேக்வால், பல்வேறு மாநில சட்டமன்றங்களின் சபாநாயகர்கள் உள்ளிட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676420
*******************
(Release ID: 1676467)
Visitor Counter : 117