சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வாகன உரிமையாளர்களின் நியமனதாரர்களை பதிவு செய்வதற்கான விதிகள்: மக்களிடம் கருத்துக் கேட்பு
Posted On:
27 NOV 2020 11:10AM by PIB Chennai
வாகன உரிமையாளர்கள் தங்களின் நியனமதாரர்களைப் பதிவு செய்வதற்கான வரைவு விதிகள் குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. இதற்கான வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் சட்டப்படியான வாரிசை, நியமனதாரராக வாகனப் பதிவு புத்தகத்தில்(ஆர்.சி) பதிவு செய்யும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கான வரைவு விதிகள் பற்றிய அறிவிப்பு நவம்பர் 26ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர் இறக்க நேர்ந்தால், அந்த வாகனத்தை நியமனதாரின் பெயரில் பதிவு செய்வதற்கும், மாற்றம் செய்வதற்கும் இந்த வசதி சேர்க்கப்படவுள்ளது.
வாகன உரிமையாளர் இறந்தால், அவரது இறப்பு சான்றிதழை, வாகன பதிவுத்துறை இணையளத்தில் நியமனதாரர் பதிவேற்றம் செய்து தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வரைவு விதிகள் குறித்த ஆட்சேபணைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்ட இயக்குனருக்கு director-morth[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், Ministry of Road Transport and Highways, Transport Bhawan, Parliament Street, New Delhi-110 001 என்ற முகவரியிலும் அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676355
**********************
(Release ID: 1676355)
(Release ID: 1676433)
Visitor Counter : 192