வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபடா), ஜெர்மனி இறக்குமதியாளர்களுடன் மெய் நிகர் வர்த்தகக் கூட்டம்

Posted On: 26 NOV 2020 4:12PM by PIB Chennai

மத்திய வர்த்தக, தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்(அபடா) ஏற்றுமதிக்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொவிட்-19 தொற்று நேரத்தில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான செயல்பாடுகளை, காணொலிக் காட்சி மூலம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டு இந்தியத் தூதரங்கள் உதவியுடன், இறக்குமதி செய்யும் நாடுகளுடன் காணொலிக் காட்சி மூலம் பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் இறக்குமதியாளர்களுடன் மெய்நிகர் கூட்டம் நவம்பர் 25ம் தேதி  நடத்தப்பட்டதுஇதில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பெர்லின் மற்றும் ஜெர்மனியில் வேளாண் வர்த்தகத்தில் ஈடுபடும் 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய ஆர்கானிக் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்  பற்றி அபடா தலைவர் விளக்கினார். ஜெர்மன் சந்தையின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து ஜெர்மன் தரப்பினர் எடுத்துக் கூறினர்.

 இந்தியாவின் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி குறித்து தெரிவிக்கவும், ஜெர்மன் வர்த்தகர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும். இந்நிகழ்ச்சி உதவியது

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676056

----- (Release ID: 1676151) Visitor Counter : 15