நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக விருப்பத் தேர்வு-1-ஐ கேரளா, மேற்கு வங்கம் தேர்ந்தெடுத்துள்ளன
प्रविष्टि तिथि:
25 NOV 2020 5:14PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 24,000 கோடியை கடனாக வாங்கி, அதை நான்கு தவணைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675673
*******************
(रिलीज़ आईडी: 1675796)
आगंतुक पटल : 181