சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இந்திய அரசியமைப்பு குறித்த ஆவணப்படத்தை அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார்

Posted On: 25 NOV 2020 4:28PM by PIB Chennai

'இந்திய அரசியலமைப்பில் சித்திரங்கள் மற்றும் கையெழுத்து' என்னும் தலைப்பிலான ஆவணப்படத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் காணொலி மூலம் இன்று வெளியிட்டார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 71-வது அரசியலமைப்பு தினத்தை 2020 நவம்பர் 26 அன்று கொண்டாட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான மைய அமைச்சகமாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இன்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தைப் பற்றி பேசிய அவர், இது ஒரு வித்தியாசமான முயற்சி என்றும் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சித்திரங்களை பற்றி ஆய்வு செய்து இருப்பதாகவும் கூறினார்.

அரசியலமைப்பின் வெற்றியை கொண்டாடுவதற்காக வருடம் முழுவதும் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையமும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.

ஆவணப்படத்தை சிறப்பான முறையில் தயாரித்து வெளிக் கொண்டு வந்ததற்காக டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைச்சர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675635

*******************



(Release ID: 1675743) Visitor Counter : 93