பிரதமர் அலுவலகம்

80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்

Posted On: 24 NOV 2020 5:54PM by PIB Chennai

80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

1921-ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இதன் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள கேவாடியாவில், நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு நாள் மாநாடு நடக்கிறது. 'சட்டமன்றம், அதிகாரிகள் மற்றும் நிதித்துறைக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பு துடிப்பான ஜனநாயகத்துக்கு அவசியம்' என்பது இந்த வருட மாநாட்டின் மையக் கருவாக இருக்கும்.

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நவம்பர் 25 அன்று இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார். குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, மக்களவை மற்றும் இந்த மாநாட்டின் தலைவர் திரு ஓம் பிர்லா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

                                                                    ------


(Release ID: 1675399) Visitor Counter : 222