சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
புதுக்கோட்டையில் 1398 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்களை இலவசமாக வழங்கும் முகாமை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2020 2:39PM by PIB Chennai
புதுக்கோட்டையில் 1398 மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கான முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ் திருநாவுக்கரசர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.
ரூ. 117 லட்சம் மதிப்புள்ள 2547 உதவி உபகரணங்கள், 1398 பயனாளிகளுக்கு வழங்கப்படும். புதுக்கோட்டையில் உள்ள 9 வட்டாரங்களில் இவை அளிக்கப்படும்.
துவக்க விழாவில் ரூபாய் 24.8 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருட்கள், புதுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளுக்கு வழங்கப்படும். கைகளால் இயக்கப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகள் 4, 11 சக்கர நாற்காலிகள், 4 கைத்தடிகள், 20 காது கேட்கும் கருவிகள் உட்பட 131 உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.
புதுக்கோட்டை நிர்வாகத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கொவிட் நடத்தைமுறைகளைக் பின்பற்றி இந்த முகாம் நடைபெறும்.
கைகளால் இயக்கும் மூன்று சக்கர மிதி வண்டிகள் 76, 301 சக்கர நாற்காலிகள், 124 கைத்தடிகள், ஒரு பிரெய்லி கிட், ஒரு பிரெய்லி பலகை, 502 காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை பல்வேறு கட்டங்களாக 9 வட்டாரங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை https://youtu.be/EjDWQrcEmPg என்னும் மின் முகவரியில் நேரடியாகக் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675068
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1675087)
வருகையாளர் எண்ணிக்கை : 184