பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகள் அந்தமான் கடல் பகுதியில் கூட்டு பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2020 5:54PM by PIB Chennai

இந்தியா -சிங்கப்பூர் இடையே 27வது இருதரப்பு கடல்சார் கூட்டு பயிற்சி -சிம்பெக்ஸ் 20’அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா, சிங்கப்பூர் கடற்படைகள் இடையே இரு தரப்பு வருடாந்திர கூட்டு பயிற்சி சிம்பெக்ஸ்கடந்த 1994ம் ஆண்டு முதல் நடக்கிறது. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்தாண்டு சிம்பெக்ஸ் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் ராணா, கமோர்தா மற்றும் கார்முக், நீர்மூழ்கி கப்பல் சிந்துராஜ், பி81 கடற் கண்காணிப்பு விமானம் ஆகியவை பங்கேற்கின்றன. சிங்கப்பூர் கடற்படை சார்பில் 3 போ்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.

 

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1674931) வருகையாளர் எண்ணிக்கை : 303
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Telugu