பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய-தாய்லாந்து கடற்படைகளின் கூட்டு ரோந்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2020 1:33PM by PIB Chennai

இந்தியா, தாய்லாந்தின் கடற்படைகளுக்கிடையேயான இந்திய-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்தின் 30-வது பதிப்பு இன்று (நவம்பர் 20) வரை நடைபெறுகிறது.

இந்தியக் கப்பலான என் எஸ் கார்முக், தாய்லாந்து கப்பலான கிரபூரி ஆகியவை இந்த ரோந்தில் பங்கேற்றுள்ளன. இந்திய அரசின் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் இதர உதவிகளை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.

இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள், உரையாடல்களின் மூலமாக நெருங்கிய நட்புறவை பேணி வருகின்றன. கடந்த சில வருடங்களாக இது இன்னும் வலுப்பட்டு வருகிறது.

கடற்சார்ந்த உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் விதமாக, 2005-ஆம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு இரு முறை கூட்டு ரோந்து நடவடிக்கையை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. வர்த்தக கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு உகந்ததாக இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674318

------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1674411) வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Malayalam