தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

சாத் பூஜா சிறப்பு தபால் தலையை வெளியிட்டார் அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்

प्रविष्टि तिथि: 19 NOV 2020 5:27PM by PIB Chennai

சாத் பூஜா குறித்த என் தபால் தலைஎன்ற சிறப்பு தபால் தலையை மத்திய தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் இன்று வெளியிட்டார். என் தபால்தலை என்பது அஞ்சல் துறையின் ஓர் புதுமையான முயற்சியாகும். இதன்படி தனி நபரோ அல்லது நிறுவனமோ தங்களது புகைப்படத்தைத் தபால் தலையாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சாத் பூஜா குறித்த என் தபால் தலை, நாட்டில் உள்ள அனைத்து தபால் தலை மையங்களிலும், முக்கிய அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும். சாத்- எளிமை மற்றும் சுகாதாரத்தின் சின்னம்' என்ற கருப்பொருளில் சிறப்பு உரையும் இன்று வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு பணத்தை அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கிய அஞ்சல்துறைக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுபோல பல்வேறு பிரபல பண்டிகைகளின் வரலாற்றையும் தபால்தலையில் வெளியிடுவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674053

**********************


(रिलीज़ आईडी: 1674082) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Telugu , English , Urdu , हिन्दी , Punjabi