ஆயுஷ்

ஆயுஷ் அமைச்சகத்தில் நிதி மேலாண்மை, ஆளுகைச் சீர்திருத்த நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2020 3:14PM by PIB Chennai

நிதி மேலாண்மையை உயர்த்தவும், ஆளுகை சீர்திருத்தங்களை துரிதப்படுத்தவும் புதிய முயற்சிகளை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் திட்டங்கள் (அரசுத்துறை மற்றும் அரசு ஆதரவளிக்கும்), அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்புகள் ஆகியவை குறித்து இந்த முயற்சிகள் அமையும்.

இதற்கான வரைவுத் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கொடேச்சாவும், நிதி ஆலோசகரும், கூடுதல் செயலாளருமான திரு தர்மேந்திர சிங் கங்வாரும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டனர்.

இந்த முயற்சியினால் பொது நிதி மேலாண்மைத் திட்டத்தில் கூடுதல் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சகத்தின் திட்டங்களில் அரசின் கணக்கு மேலாண்மைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் தன்னாட்சி அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் அமைச்சகத்தின் இலக்கு, குறிக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகளால் அரசுத்துறைத் திட்டங்கள், அரசு ஆதரவளிக்கும் திட்டங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674004

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1674036) வருகையாளர் எண்ணிக்கை : 254
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Telugu