பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

தற்சார்பு இந்தியா திட்டம், நாட்டை உலகளாவிய உற்பத்தி மையமாக்கும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Posted On: 19 NOV 2020 1:54PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா திட்டம், நாட்டை உலக அரங்கில் உற்பத்தி மையமாக மாற்றும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

வியாபாரிகளின் வர்த்தக மற்றும் தொழில் சபையின்  119-வது ஆண்டு கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:

தற்சார்பு இந்தியா திட்டம், நாட்டை அமைதியான சந்தை என்ற நிலையில் இருந்து உலகின் தீவிர உற்பத்தி மையமாக மாற்றப் போகிறதுதற்சார்பு இந்தியா, உற்பத்தித் துறையுடன் கூடிய வலுவான இந்தியா. நம் நாடு தற்சார்புடையதாக இருந்தாலும், உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒருங்கிணைந்து இருக்கும்தற்சார்பு இந்தியா, உலகப் பொருளாதாரத்தை பல மடங்கு அதிகரிக்கும் சக்தியாக இருக்கும்கிழக்கு இந்தியா, தற்சார்புடையதாக மாறாமல், இந்தியா தற்சார்பாக ஆக முடியாது. நாட்டின் வளர்ச்சியை, பூர்வோதையா-கிழக்கிந்தியா திட்டம் மேம்படுத்தும். நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, கிழக்கிந்தியாவின் ஆற்றலைப் பயன்படுத்த, கிழக்கிந்தியப்பகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதுதான் பூர்வோதைய திட்டத்தின் சாரம்சம். பூர்வோதைய திட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் எஃகுத் துறை முக்கிய பங்காற்ற வேண்டும்.

பூர்வோதையா திட்டத்தின் கீழ், கிழக்கு இந்தியாவில் ஒருங்கிணைந்த எஃகு உற்பத்திய மையத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது எஃகுத் துறையில் போட்டியை ஏற்படுத்தி கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் உதவும்.

இந்திரா தனுஷ் வடகிழக்கு கேஸ் தொகுப்புத் திட்டங்களின் கீழ், மத்திய அரசின் மூலதன மானியத்துடன்  கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில், புதிய சந்தைகளை இந்தியா கேஸ் தொகுப்பு விரிவுபடுத்தி வருகிறது. பிரதமரின் உர்ஜா கங்கா திட்டம் மூலம் கிழக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673979

 

**********************

(Release ID: 1673979)


(Release ID: 1674027)