வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் ஸ்வாநிதித் திட்டம்: நடைபாதை வியாபாரிகள் அமோக வரவேற்பு

Posted On: 18 NOV 2020 1:15PM by PIB Chennai

பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதியான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இவற்றில் 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களில் 3.27 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.87 லட்சம் கடன்கள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளன.

கொவிட்-19 காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள வியாபாரிகள் ஊர் திரும்பிய பிறகு, இந்தத் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெற்றுப் பயனடையலாம். கடன் பெறுவதற்கு வியாபாரிகள் சுலபமாக தாங்களாகவே இணையதளம் வாயிலாகவோ அல்லது வங்கிகள் அல்லது நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்றோ விண்ணப்பிக்கலாம். கடன் தொகையை வங்கிகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குகின்றன. வங்கி ஊழியர்களின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, “ஒருகாலத்தில் நடைபாதை வியாபாரிகள் வங்கியினுள் நுழையாமல் இருந்தனர். இன்று வங்கியே அவர்களது வீடுகளுக்குச் செல்கின்றது”  என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுள்ள ஏராளமான வியாபாரிகள் குறித்த காலத்திற்குள்ளாக தங்களது கடனை திருப்பி செலுத்தி உள்ளனர். இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரிநாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையிலான இந்தத் திட்டம், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பாதையில்  ஒரு சிறந்த முயற்சி என்று கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673685

**********************

(Release ID: 1673685)



(Release ID: 1673710) Visitor Counter : 252