அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மண் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 17 NOV 2020 6:07PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்-மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனம், தன்பாத்தின் பவள விழா கொண்டாட்டங்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று துவக்கி வைத்தார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் பெருமைக்குரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஒன்றான மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்-மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனத்தின் பவள விழாவை புது தில்லியில் இருந்து காணொலி மூலம் அமைச்சர் துவக்கி வைத்தார்

அதோடு, மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்-மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கிய மூன்று தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை நாட்டுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மண் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார். கரியமில தடம், சமூக-பொருளாதார மற்றும் வேளாண் சூழலியல் அமைப்புகள், வன உயிர் மேலாண்மைத் திட்டம், அழிந்து போன சூழலியலின் உயிரி-மீட்டுருவாக்கல் ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி சுரங்க நடவடிக்கைகளின் இயந்திரமயமாக்கல் மற்றும் தானியங்கிப்படுத்துதல் ஆகியவை குறித்த பல்முனை ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்-மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆய்வு நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673486

------ 


(Release ID: 1673534) Visitor Counter : 218