பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அரசின் கொள்கை எரிசக்தித் துறையில் தற்சார்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Posted On:
17 NOV 2020 2:52PM by PIB Chennai
சந்தைக்கு நட்பான கொள்கையான திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை (Open Acreage Licensing Policy - OALP) எரிசக்தித் துறையில் தற்சார்பை உருவாக்கிக் கொண்டிருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் ஐந்தாம் சுற்றின் கீழ் வழங்கப்பட்ட 11 எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (HELP) அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் நடைபெற்ற, திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் மூலம், ஆய்வு செய்யப்படும் நிலப்பரப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
முந்தைய ஆட்சிகளின் போது 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக இருந்த ஆய்வு செய்யப்படும் நிலப்பரப்பின் அளவு, திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் ஐந்தாம் சுற்றின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் காரணமாக 2,37,000 சதுர கிலோ மீட்டராக தற்போது அதிகரித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673425
------
(Release ID: 1673446)
Visitor Counter : 183