குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியாவை சர்வதேச அறிவுசார் வல்லரசாக ஆக்குவதை தேசிய கல்விக் கொள்கை லட்சியமாகக் கொண்டுள்ளது: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
17 NOV 2020 2:27PM by PIB Chennai
கல்வித்துறையில் உலகத்துக்கே குருவாக நம் நாடு மீண்டும் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இந்தியாவை சர்வதேச அறிவுசார் வல்லரசாக ஆக்குவதை தேசிய கல்விக் கொள்கை லட்சியமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
அகர்தலா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், மாணவர்களை முழுமையான மனிதர்களாக உருவாக்கும் இந்தியாவின் பண்டைய கல்வி முறையை உதாரணமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்திய கல்வியை முழுமையானதாகவும், பல்நோக்கு கொண்டதாகவும் மற்றும் செயல்முறைக்கு ஏற்றதாகவும் மாற்ற தேசிய கல்விக் கொள்கை விரும்புவதாக குடியரசு துணைத் தலைவர் மேலும் கூறினார்.
இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்கும், அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை மதிப்பதற்கும் நமது பண்டைய கல்வி முறை நமக்கு கற்றுக் கொடுத்தது என்று கூறிய அவர், நமது கல்வி, செயல் முறைக்கு உகந்ததாக, முழுமையானதாக, வாழ்க்கைக்கு உதவுவதாக இருந்தது என்றார்.
இந்தியாவை அறிவு மற்றும் புதுமைகளின் மையமாக ஆக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பெரிதாக கனவு காணுமாறும், அர்ப்பணிப்போடும், ஒழுக்கத்தோடு உழைக்குமாறும் திரு வெங்கையா நாயுடு மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்காமல், வேலை வழங்குபவர்களாக உருவாக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார். மாணவர்கள், கிராமங்களில் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அப்போதுதான் ஊரக இந்தியாவின் சவால்கள் அவர்களுக்குப் புரியும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673418
------
(Release ID: 1673436)
Visitor Counter : 226