பிரதமர் அலுவலகம்

பீகார் முதல்வராக பதவி ஏற்ற திரு நிதிஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 16 NOV 2020 5:49PM by PIB Chennai

பீகார் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட திரு நிதிஷ் குமாருக்கு, பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள தகவலில், ‘‘பீகார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். பீகார் அரசின் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி என்ற  குடும்பம் இணைந்து பணியாற்றும். பீகாரின் நலனுக்கு  மத்திய அரசிடமிருந்து, முடிந்தளவு அனைத்து விதமான  ஆதரவும் கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.’’ என கூறியுள்ளார்.

-----


(रिलीज़ आईडी: 1673324) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam