சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கான பல்வேறு சலுகைகளை நீட்டிப்பது குறித்த வழிகாட்டுதல்கள்
Posted On:
13 NOV 2020 5:22PM by PIB Chennai
மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் வசதிகளை அளிக்கும் விதமாக, அவர்களது வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகளை நீட்டிப்பது குறித்த அறிவுரையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.
முன்னதாக, வாகன உரிமையாளர்களின் தகவல்களை அவற்றின் பதிவின் போதே பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படிவம் 20-இல் திருத்தம் செய்வது குறித்து 2020 அக்டோபர் 22 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
வாகன உரிமையாளர்களைப் பற்றிய தகவல்கள் சரியான முறையில் பதியப்படுவதில்லை என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த திருத்தத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்தமான வாகனங்களைப் பற்றிய தகவல்கள் சரியான முறையில் பதிவு செய்யப்படுவதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சலுகை மற்றும் இதர பலன்களை எளிதாகப் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672659
**********************
(Release ID: 1672720)
Visitor Counter : 155