ஜல்சக்தி அமைச்சகம்

பஞ்சாப்பில் ஜல் ஜீவன் இயக்கம் முழு வீச்சில் அமல் -மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தை பஞ்சாப் அரசு முழு வீச்சில் அமல்படுத்தி வருகிறது.

Posted On: 13 NOV 2020 4:00PM by PIB Chennai

2022-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குழாய் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான இலக்கை பஞ்சாப் நிர்ணயித்துள்ளது. இது தவிர 2020-21-ஆம் ஆண்டுக்குள் 7.06 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கமானது மாநில அரசின் பங்களிப்புடன் கிராமத்தினரின் வாழ்கைத் தரத்தை உயர்த்த குறிப்பாக பெண்கள்& குழந்தைகள் நல்ல வாழ்க்கை தரத்தை பெறுவதை நோக்கி பணியாற்றுகிறது.

2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் குழாய் மூலம் குடிநீர் பெறுவதற்கான குடிநீர் இணைப்பை வழங்குவதை  நோக்கமாகக் கொண்ட  இந்த  முதன்மையான திட்டம் மாநிலங்களின் பங்கெடுப்புடன் ஜல் ஜீவன் இயக்கம் என்ற பெயரில் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகிறது. நீண்டகால அடிப்படையில் முறையான நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் நாள் ஒன்றுக்கு தனிநபர் ஒருவருக்கு 55 லிட்டர்கள் என்ற சேவை அளவில் பாதுகாப்பான குடிநீர் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த  திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672627

**********************



(Release ID: 1672682) Visitor Counter : 126