பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தபால்காரர் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தவாறே சமர்ப்பிக்கலாம்

Posted On: 12 NOV 2020 4:08PM by PIB Chennai

ஓய்வூதியர்கள் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தவாறே சமர்ப்பிக்கும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறையின் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறையின் கட்டணங்கள் வங்கி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த புதிய சேவையை வெற்றிகரமாகத் தொடங்கி உள்ளன.

ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை எளிமையான மற்றும் வெளிப்படையான முறையில் சமர்ப்பிப்பதை உறுதி செய்வதற்காக, அச்சான்றிதழை ஜீவன் பிரமான் இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.

அன்று முதல், இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் மூத்த ஓய்வூதியர்களுக்கு இன்னும் அதிக வசதிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தொடர்ந்து எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் இந்த சேவைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்திய தபால் துறையின் கட்டணங்கள் வங்கியின் பரந்து விரிந்த வலைப்பின்னலையும், தபால்காரர்களையும், இதர பணியாளர்களையும் பயன்படுத்திக் கொள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத் துறை முடிவு செய்தது.

இவர்களின் மூலம் ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை தங்களின் வீட்டில் இருந்தவாறே டிஜிட்டல் முறையில் தற்போது சமர்ப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களை http://ippbonline.com/ என்னும் இணைய முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672278

**********************



(Release ID: 1672361) Visitor Counter : 221