பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடனான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, நிதியதவி அளிப்பதை தொடரவும், மறுசீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
11 NOV 2020 3:51PM by PIB Chennai
மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 2024-25ம் ஆண்டு வரை, பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் நடக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை, ரூ.8,100 கோடி செலவில் தொடரவும், மறுசீரமைக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
தனியார் பங்களிப்புடன் நடைபெறும் சமூக உள்கட்டமைப்புத் திட்டத்தில், கீழ்கண்ட 2 துணைத் திட்டங்களை அறிமுகம் செய்வதுதான் மாற்றியமைக்கும் திட்டம்.
அ. துணை திட்டம் -1
கழிவுநீர் சுத்திகரிப்பு, குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மறறும் கல்வித்துறை திட்டங்கள் போன்றவற்றை இது பூர்த்தி செய்யும். இந்த உள் கட்டமைப்புத் திட்டங்கள், வங்கிக் கடன் பிரச்னைகளையும், நிதி வருவாய் பிரச்னைகளையும் சந்திக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கு 100% செலவினத் தொகை கிடைக்க வேண்டும். இந்தத் திட்டங்களின் மொத்த செலவில் 30 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும், மாநில அரசு மற்றும் நிதியுதவி வழங்கும் அமைப்புகள் 30சதவீதத் தொகையை அளிக்கும்.
ஆ. துணைத் திட்டம் -2
இந்த துணைத் திட்டம், சோதனை அடிப்படையிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியதவி அளிக்கும். இந்தத் திட்டங்கள் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறைகளைச் சார்ந்ததாக இருக்கலாம். இந்தத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் 80சதவீதத் தொகையை அளிக்கும். 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவில் 50 சதவீத தொகையை அளிக்கும். திட்டங்களுக்கான மொத்த செலவில் மத்திய அரசு 40 % அளிக்கும். மேலும், முதல் 5 ஆண்டுகளுக்கு வர்த்தக அடிப்படையிலான செயல்பாட்டில் 25% வீத செலவை அளிக்கும்.
இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து, 64 திட்டங்களை ரூ.34,228 கோடி செலவில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671910
**********************
(Release ID: 1671942)
Visitor Counter : 376
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam