பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பு போட்டிகள் : நாளை தில்லியில் துவங்குகிறது
Posted On:
11 NOV 2020 2:04PM by PIB Chennai
சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பின் போட்டிகள் இம்மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் தில்லியில் உள்ள ராணுவ போலோ மற்றும் குதிரை ஓட்டப் பந்தய மையத்தில் நடைபெறும்.
மூன்று பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் குறைந்த அபராதம் வழங்கப்பட்ட வீரர், குறிப்பிட்ட பிரிவின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவரின் சோதனை, டிரெஸ்ஸேஜ் என்று அழைக்கப்படும் குதிரை ஓட்டப் பயிற்சி, க்ராஸ் கன்ட்ரி என்ற தடைகளைத் தாண்டும் பயிற்சி, உயரம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். அனைத்துப் பிரிவுகளிலும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா அணி பெற்றதை அடுத்து இந்திய குதிரையேற்ற கூட்டமைப்புக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது.
வரும் 2022- ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு இந்தியாவில் சர்வதேச குதிரையேற்றப் போட்டிகள் நடைபெறுகின்றன. சுமார் 50 முன்னணி வீரர்களுடன் 60 குதிரைகளும் இதில் பங்கேற்க இருக்கின்றன.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிகபட்ச பதக்கங்களை குதிரையேற்றப் போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671874
******
(Release ID: 1671906)
Visitor Counter : 159