உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவு பதப்படுத்துதல் துறையில் 29 திட்டங்களுக்கு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
09 NOV 2020 6:28PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான ஒப்புதல் குழுக் கூட்டத்தில் 29 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குளிர் பதன கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டல் திட்டத்தின் கீழ் ரூபாய் 443 கோடி முதலீட்டில் 21 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பயன் அளிக்கும் என்றார். இதன் மூலம் 12,600 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 2,00,592 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் ரூபாய் 62 கோடி முதலீட்டில் 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மதிய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி இதில் கலந்து கொண்டார்.
இந்த திட்டங்களின் வாயிலாக 2500 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671471
-----
(रिलीज़ आईडी: 1671591)
आगंतुक पटल : 250