கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய அருங்காட்சியகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
Posted On:
09 NOV 2020 6:54PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊரடங்கு தளர்வு 5.0 வழிகாட்டுதல்களின் படி நாடு முழுவதும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், கலைக் கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.
தேசிய அருங்காட்சியகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671482
-----
(Release ID: 1671588)
Visitor Counter : 208