சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

1 நிமிடத்துக்குள் பேருந்துகளில் தீயை அணைக்கும் கருவி, மத்திய அமைச்சர்கள் பார்வை

Posted On: 09 NOV 2020 4:18PM by PIB Chennai

பேருந்துகளில் 30 வினாடிகளில் தீயை கண்டுபிடித்து, ஒரு நிமிடத்துக்குள் தீயை அணைக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கிய கருவியை மத்திய அமைச்சர்கள் திரு.ராஜ்நாத் சிங், திரு. நிதின் கட்கரி ஆகியோர் பார்வையிட்டனர்.

பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் தீ பற்றினால், அதை 30 வினாடிகளுக்குள் கண்டுபிடித்து, நீராவியை பீய்ச்சி அடித்து, தீயை ஒரு நிமிடத்துக்குள் அணைக்கும் கருவிபேருந்து இன்ஜினில் தீப்பற்றினால் ஏரோசால் மூலம்  தீயை அணைக்கும் கருவி ஆகியவற்றை டிஆர்டிஓ உருவாக்கியது. இதற்காக பேருந்தில் 80 லிட்டர் கொள்ளவு தண்ணீர் டேங்க், 6.8 கிலோ நைட்ரஜன் சிலிண்டர்  ஆகியவை பொருத்தப்படும்.   இந்த டேங்கிலிருந்து செல்லும் குழாய்கள், பேருந்தில் 16 இடங்களில் உள்ள தானியங்கி குழாய்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றின் செய்முறை விளக்கத்தை, தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்இது தவிர , டிஆர்டிஓ-வின் பல திட்டங்கள், கருவிகள் குறித்தும் அமைச்சர்களிடம் விவரிக்கப்பட்டது. இந்த நவீன கருவிகள் மூலம் தீ விபத்துகளில் இருந்து பயணிகள் மற்றும் பேருந்துகளைப் பாதுகாக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671417

---- 


(Release ID: 1671582) Visitor Counter : 229