அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வட கிழக்கு மாகாணங்களில் குங்குமப்பூ பயிர் சோதனை வெற்றி

Posted On: 09 NOV 2020 3:02PM by PIB Chennai

காஷ்மீரில் மட்டுமே இதுவரை விளைந்து வந்த குங்குமப்பூ தற்போது இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளிலும் விரைவில் காணப்படும். காஷ்மீரிலிருந்து  சிக்கிம் மாநிலத்தின் தென் பகுதியான யாங்யாங்-கில் பயிரிடப்பட்ட குங்குமப்பூ தாவரங்கள் அங்கே தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தட்பவெப்பம் குங்குமப்பூ உற்பத்திக்கு உகந்ததாக கருதப்படுகிறதுஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதிகுங்குமப்பூ உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது இதையடுத்து பட்காம், ஸ்ரீநகர் மற்றும் கிஷ்டிவார் மாவட்டங்களும் நாட்டின் குங்குமப்பூ  உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

          இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நெக்டர் என்னும் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான வடகிழக்கு மையம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் குங்குமப்பூ பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் திட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

சிக்கிம் மத்திய பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் தோட்டக்கலைத் துறை இதற்கான பணிகளை மேற்கொண்டது. காஷ்மீரில் இருந்து குங்குமப்பூ விதைகள் விமானம் மூலமாக சிக்கிம் கொண்டுவரப்பட்டு யாங்யாங் பகுதியில் பயிரிடப்பட்டன.

காஷ்மீரின் பாம்போர் பகுதியின் பருவநிலை மற்றும் புவியியலை ஒத்து இருக்கும் சிக்கிம் மாநிலத்தின் யாங்யாங்கில் இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வடகிழக்கு மாகாணங்களின் இதர பகுதிகளிலும் குங்குமப்பூ விரைவில் பயிரிடப்படக்கூடும்.

குங்குமப்பூ உற்பத்திக்கான தேசிய இயக்கம் இதன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671408

---


(Release ID: 1671565) Visitor Counter : 267