குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

அருணாச்சலப் பிரதேச மாணவர்களுக்கு வண்ணமிகு காதி முகக்கவசங்கள்

प्रविष्टि तिथि: 09 NOV 2020 2:44PM by PIB Chennai

கொவிட்-19 பொதுமுடக்கத்துக்குப் பின்னர் முதல் முறையாக பள்ளிகளுக்கு செல்லவிருக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், மூவண்ண காதி முகக் கவசங்களை அணியவிருக்கிறார்கள்.

நவம்பர் 16-ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை மீண்டும் திறக்க அருணாச்சலப் பிரதேச அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், 60,000 உயர்தர முகக் கவசங்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு, இந்தளவு அதிகமான எண்ணிக்கையில் காதி முகக் கவசங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். நவம்பர் 3 அன்று கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு ஆறே நாட்களில்  காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் முகக் கவசங்களை விநியோகித்தது.

முகக் கவசங்கள் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அவற்றை விமானம் மூலம் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அனுப்பி வைத்தது.

பருத்தியால் செய்யப்பட்ட, இரண்டு அடுக்குகள் கொண்ட, மூவண்ண முகக் கவசங்களை அவற்றின் மீது தனது இலச்சினையைப் பதித்து அருணாச்சலப் பிரதேச அரசுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியுள்ளது. மூவண்ணத்தில் உள்ள முகக் கவசங்கள் தேசிய உணர்வை மாணவர்களிடையே விதைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671399

**********************


(रिलीज़ आईडी: 1671540) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Telugu