நிலக்கரி அமைச்சகம்

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் ஆறாம் நாள் ஏல விவரங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2020 2:48PM by PIB Chennai

* வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் ஆறாம் நாள் ஏலத்தில் ஜார்க்கண்டில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கம் ஏலத்தில் விடப்பட்டது.

* ஏலத்தில் விடப்பட்ட மொத்த புவியியல் இருப்புகளின் அளவு ~176.33 மெட்ரிக் டன்கள் ஆகும்.

விண்ணப்பதாரர்களிடையே கடும் போட்டி நிலவியது, ஒதுக்கீட்டு விலையை விட அதிகத் தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் 2020 ஜூன் 18 அன்று தொடங்கியது.

சமர்ப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான மின் ஏலம் நவம்பர் 2 அன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670937

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1671107) வருகையாளர் எண்ணிக்கை : 159
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Manipuri