எரிசக்தி அமைச்சகம்
விரிவாக்கத் திட்டங்களுடன் எதிர்காலத்துக்காக சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் என்.டி.பி.சி, மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் பாராட்டு
Posted On:
07 NOV 2020 6:13PM by PIB Chennai
விரிவாக்கத் திட்டங்களுடன் எதிர்காலத்துக்காக சிறப்பான முறையில் தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தயாராகிக் கொண்டிருப்பதாக மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வழியில் நடைபெற்ற என்.டி.பி.சி நிறுவனத்தின் 46-வது ஆண்டு தொடக்க விழாவில், அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களிடன் குடும்பத்தினரிடையே திரு ஆர்.கே.சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பொறுப்புமிக்க பெருநிறுவனம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களுடன் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் பணியில் தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அர்பணிப்புக்கு சான்றாக, சுற்றுச்சூழல் மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் கூடுதல் திறனான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நோக்கி என்.டி.பி.சி கடமையாற்ற உள்ளது.
பெருந்தொற்று காலத்தின்போது, நமது அன்றாட வாழ்க்கைகு தேவையான மின்சாரத்தின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடையற்ற மின் விநியோகத்தை என்.டி.பி.சி உறுதி செய்தது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ஆர்.கே.சிங் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671017
**********************
(Release ID: 1671089)
Visitor Counter : 188