மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கரக்பூர் ஐஐடி-யில் சிறந்த இந்திய அறிவுசார் திட்ட மையம்: மத்திய கல்வி அமைச்சர்

Posted On: 06 NOV 2020 5:57PM by PIB Chennai

கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சிறந்த தரத்திலான இந்திய அறிவு சார்ந்த திட்ட மையம் உருவாக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' தெரிவித்துள்ளார்.

'பாரத தீர்த்தா' என்ற தலைப்பில் இந்திய தொழில்நுட்பக் கழகம், கரக்பூர் ஏற்பாடு செய்திருந்த 3 நாள் சர்வதேச இணைய கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இதைக் கூறினார்.

இந்தியாவின் உயர்ந்த கல்வி பாரம்பர்யத்தின் உள்ளார்ந்த சக்தியில் இருந்தும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய மக்களுக்கு கல்வி செயல்முறையை எளிதாக்க சமஸ்கிருத புத்துணர்ச்சியுடன் தாய் மொழி வாயிலாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான தேசியக் கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் உருவாக்கத்தை உறுதிப்படுத்திய அவர், இந்திய அறிவியல் மற்றும் மொழிகளின் பாரம்பரியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார். இன்னும் இருக்கும் வரலாற்று கல்வி வளங்களையும் அணுக வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670700



(Release ID: 1670954) Visitor Counter : 112