ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை- ஹெச்ஐஎல் இடையே ரூ 451 கோடி வருவாய் இலக்கை எட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

प्रविष्टि तिथि: 06 NOV 2020 2:37PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஐஎல் (இந்தியா) லிமிடெட், நடப்பு நிதியாண்டில் (2020-21) ரூ 451 கோடி வருவாய் இலக்கை எட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையுடன் சமீபத்தில் கையெழுத்திட்டது.

ஹெச்ஐஎல் (இந்தியா) லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு எஸ் பி மொஹந்தி மற்றும் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சதுர்வேதி ஆகியோர் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போது பேசிய திரு மொஹந்தி, ரூ 451 கோடி வருவாய் இலக்கை நடப்பு நிதியாண்டில் அடைவது சாத்தியமே என்றும் எளிதாக எட்டி விடலாம் என்றும் கூறினார். முதல் இரு காலாண்டுகளில் 65 சதவீத சிறப்பான வளர்ச்சியை ஹெச்ஐஎல் (இந்தியா) எட்டி உள்ளதாக அவர் கூறினார்.

530.10 மெட்ரிக் டன் மலாத்தியன் டெக்னிக்கலை முதல் இரு காலாண்டுகளில் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், இதுவரையிலான உற்பத்தியிலேயே இதுதான் அதிக அளவு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 375.5 மெட்ரிக் டன் மலாத்தியன் டெக்னிக்கலை உற்பத்தி செய்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670619

**********************


(रिलीज़ आईडी: 1670720) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu