அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இதுவரை கவனம் செலுத்தப்படாத சமூக, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளின் மீது கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் கோரிக்கை

Posted On: 05 NOV 2020 5:13PM by PIB Chennai

ஆராய்ச்சித் தேடல்களின் முன்னேற்றத்துக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகள் - காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு (SITARE-GYTI) மற்றும் நீடித்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் முன்னெடுப்புகளுக்கான அமைப்பு - காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு (SRISTI-GYTI) என்னும் இரண்டு விருதுகளை தில்லியில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று வழங்கினார்.

          ஆராய்ச்சித் தேடல்களின் முன்னேற்றத்துக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகள் - காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் கீழ் 14 விருதுகள் மற்றும் 11 பாராட்டு விருதுகள், மற்றும் நீடித்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் முன்னெடுப்புகளுக்கான அமைப்பு - காந்திய இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் கீழ் 7 விருதுகள் மற்றும் 16 பாராட்டு விருதுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

 

தொடர்புடைய துறைகளின் சிறந்த பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடுமையான ஆய்வுக்கு பிறகு விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இதுவரை கவனம் செலுத்தப்படாத சமூக, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளின் மீது கவனம் செலுத்துங்கள் என்று மாணவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தின் போது தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் சுவாசக் கருவிகளை இந்தியா தயாரித்து வைக்கவில்லை என்றும், ஆனால் தற்போது அரசின் ஆதரவோடு இந்திய தொழில் முனைவோர் எடுத்த முயற்சிகளின் காரணமாக மேற்கண்ட பொருட்களின் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், இதர நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670367

----



(Release ID: 1670480) Visitor Counter : 258