பாதுகாப்பு அமைச்சகம்

மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

Posted On: 04 NOV 2020 6:01PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ஒடிசா சந்திப்பூரில் இருந்து இன்று, 2020, நவம்பர் 4- ஆம் தேதி நடத்திய மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றது. முந்தைய  பினாகா ராக்கெட்டை விட அதிக தூரம் சென்று இலக்கை எட்டும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்  தயாரிக்கப்பட்டுள்ளது.    பூனாவை தலைமையிடமாகக் கொண்ட டிஆர்டிஓ ஆய்வக கூடங்களில் இந்த ராக்கெட் லாஞ்சர் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6 ராக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக சோதனை செய்யப்பட்டு, குறித்த இலக்கை தாக்கி அழித்து வெற்றி பெற்றன.

இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பினாகா மார்க்- I வகை ராக்கெட்டுக்கு மாற்றாக செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670104

*******

(Release ID: 1670104)


(Release ID: 1670263)