சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மெய்நிகர் தளத்தின் மூலம் உதவிகளை வழங்குவதற்கான முகாமை வட மும்பையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்துகிறது

Posted On: 04 NOV 2020 5:26PM by PIB Chennai

வட மும்பையில் உள்ள அடையாளம் காணப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கான முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் நாளை தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் வட மும்பையில் உள்ள காண்டிவலியில் (மேற்கு) மெய்நிகர் முறையில் காணொலி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பொயின்சூர் ஜிம்கானா என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வட மும்பை மக்களவை உறுப்பினர் திரு கோபால் ஷெட்டி தலைமை தாங்குகிறார். கொவிட்-19 காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் எந்தவிதமான தடங்கல்களும் இன்றி சென்றடைவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

வட மும்பையில் உள்ள ஆறு இடங்களில் இருந்து மொத்தம் 1035 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரூ 87.97 லட்சம் மதிப்புடைய 1740 உதவி உபகரணங்கள் பயனாளிகளுக்கு இந்த முகாமில் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670076

----


(Release ID: 1670200) Visitor Counter : 131