தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது
Posted On:
03 NOV 2020 5:19PM by PIB Chennai
தில்லியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கள அலுவலகங்கள்/மருத்துவமனைகளில் 2020 அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் உற்சாகத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது.
பொது மக்களின் நலனுக்காக தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் எடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து பங்குதாரர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் போது நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா' என்பதே இந்த வருட ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் மையக்கருவாகும். ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிகழ்ச்சிகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 2020 அக்டோபர் 27 அன்று ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டதில் இருந்து தொடங்கியது.
2020 அக்டோபர் 29 அன்று உரையாற்றிய தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திருமதி அனுராதா பிரசாத், ஒருவரது வாழ்க்கையில் நேர்மை மற்றும் நாணயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி திருமிகு கரிமா பகத் ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. சுவரொட்டி தயாரிக்கும் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669791
-----
(Release ID: 1669912)
Visitor Counter : 205