ஜல்சக்தி அமைச்சகம்

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கிடையே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் மெய்நிகர் முறையில் கங்கை உற்சவம் தொடங்கியது

Posted On: 02 NOV 2020 7:02PM by PIB Chennai

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்கை உற்சவம் இன்று தொடங்கியது. தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் ரஞ்சன் மிஸ்ராசிறுவயது முதல் கங்கை உடனான அவரது தொடர்பை பகிர்ந்து கொண்டார்.

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கிடையே உற்சாகம் மற்றும் கொண்டாட்டத்துடன் மெய்நிகர் முறையில் கங்கை உற்சவம் தொடங்கியது. முதல் நாள் அன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கொரியா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கங்கை உற்சவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்கள் இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி பேசியுள்ளனர்.

கங்கை உற்சவத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்களில் நடத்தப்பட்டன. மேலும் இரண்டு நாட்களுக்கு, அதாவது நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கீழ்கண்ட இணைப்புகளின் மூலம் இதில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்

 

http://www.gangautsav.in/

https://www.youtube.com/namamigange

https://www.facebook.com/cleanganganmcg

https://twitter.com/cleanganganmcg

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669540

******

(Release ID: 1669540)


(Release ID: 1669637) Visitor Counter : 208