நிலக்கரி அமைச்சகம்

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் முதல் நாள் ஏலம் உற்சாகத்துடன் தொடங்கியது

प्रविष्टि तिथि: 02 NOV 2020 6:24PM by PIB Chennai

வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் முதல் நாள் ஏலம் விண்ணப்பதாரர்களுக்கு இடையேயான வலுவான, அதேசமயம் ஆரோக்கியமான போட்டியுடன் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் 2020 ஜூன் 18 அன்று தொடங்கியது.

சமர்ப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான மின் ஏலம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

சில சுரங்கங்களுக்கான ஏலம் 3 முதல் 4 மணி நேரம் வரை நடைபெற்ற நிலையில் முதல் நாள் அன்றே பலத்த போட்டி நிலவியது. சந்தையில் நிலக்கரி சுரங்கங்களுக்குக்கான வலுவான தேவை இருப்பதை இது வெளிப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669526

*******

(Release ID: 1669526)


(रिलीज़ आईडी: 1669634) आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada