இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்- மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2020 4:27PM by PIB Chennai
பஞ்சாப் மாநிலம் சிராக்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய விளையாட்டு மையத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். வட இந்தியாவில் உள்ள முக்கிய இந்திய விளையாட்டு மையங்களுள் இந்த புதிய மையமும் இடம்பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், "இந்தியாவின் நிலப்பரப்பில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லே-விலிருந்து இமாச்சலப் பிரதேசம் வரையிலான அதிக பகுதிகளை உள்ளடக்கிய வட இந்தியாவை மேம்படுத்தும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மையங்களைத் தொடங்கும் நோக்கத்தோடும் நாம் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் எதிர்காலமான விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன", என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669477
*****
(Release ID: 1669477)
(வெளியீட்டு அடையாள எண்: 1669553)
வருகையாளர் எண்ணிக்கை : 154