வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஐஎஸ்ஓ 17020:2012 தரச்சான்றை தேசிய உற்பத்தித் திறன் குழு பெற்றது

Posted On: 29 OCT 2020 4:38PM by PIB Chennai

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித் திறன் குழுவுக்கு  ஐஎஸ்ஓ 17020:2012 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

சான்றளிப்பு அமைப்புக்கான தேசிய அங்கீகார வாரியம், இந்திய தர நிர்ணயக் குழு இந்த சான்றை தேசிய உற்பத்தித் திறன் குழுவுக்கு வழங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு தணிக்கை மற்றும் வேளாண் பொருட்களின் அறிவியல் பூர்வமான சேமிப்பு ஆகிய துறைகளில் ஆய்வு மற்றும் தணிக்கை செய்வதற்காக இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் மூன்று வருடங்களுக்கு செல்லும். ஆய்வு மற்றும் தணிக்கை நடவடிக்கைகளுக்காக ஆய்வுப் பிரிவு ஒன்றை தனது தலைமயகத்தில் தேசிய உற்பத்தித் திறன் குழு ஏற்கனவே நிறுவியுள்ளது.

கிடங்கு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் போன்ற பல்வேறு சட்டப்பூர்வ அமைப்புகளுக்கு  ஆய்வு மற்றும் தணிக்கை ஆகியவற்றை தேசிய உற்பத்தித் திறன் குழு நடத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைகளில் நன்மதிப்பையும் தேசிய உற்பத்தித் திறன் குழு பெற்றுள்ளது. தற்போது கிடைத்துள்ள ஐஎஸ்ஓ 17020:2012 தரச்சான்றின் மூலம் சுதந்திரமான மூன்றாம் நபர் தணிக்கைகளை இக்குழு நடத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668427

---- (Release ID: 1668946) Visitor Counter : 190