எரிசக்தி அமைச்சகம்

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வார நிகழ்ச்சிகளை தனது மின் நிலையங்களில் என்டிபிசி தொடங்கியது

Posted On: 29 OCT 2020 3:35PM by PIB Chennai

நாட்டின் மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளரும் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமுமான என்டிபிசி லிமிடெட், "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா" என்னும் லட்சியத்தை அடையும் நோக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வார நிகழ்ச்சிகளை தனது மின் நிலையங்களில்  தொடங்கியது

அக்டோபர் 27 அன்று தொடங்கிய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், நவம்பர் 2-ஆம் தேதி வரை என்டிபிசி லிமிடெட்டின் மின் நிலையங்களில் நடைபெறும்.

          பொறுப்புக்கூறலை ஊக்கப்படுத்துவதற்கும், வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிப்பதற்கும் என்டிபிசியின் மூத்த அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் அவர்கள் உறுதியேற்றனர்.

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு வாரத்தின் போது தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான லட்சியத்தை என்டிபிசி மீண்டும் உறுதிப்படுத்தும். விழிப்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் தொடர்ந்து செயல்படுவதற்கு உறுதி ஏற்றுக் கொள்ளும்.

 

ஊழல் தடுப்பைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, விநாடி வினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி பொன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அதன் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் என்டிபிசி நடத்தும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668391

----- 



(Release ID: 1668945) Visitor Counter : 83