ஜல்சக்தி அமைச்சகம்

கேரளாவில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஜல்சக்தி அமைச்சகம் ஆய்வு

Posted On: 29 OCT 2020 4:51PM by PIB Chennai

கேரள மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த இடைக்கால அறிக்கையை அந்த மாநிலத்தின்அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் வழங்கினர்.

இந்த அறிக்கையின்படி வரும் 2023- 24 ஆம் ஆண்டுக்குள் கேரளாவில் 100% ஊரக வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தமுள்ள 67.15 லட்சம் ஊரக வீடுகளில் 49.65 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. 2020- 21ஆம் ஆண்டில் 21.42 லட்சம் வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்க அந்த மாநிலம் திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2493 வசிப்பிடங்களில் தண்ணீர் குழாய் இணைப்பு இதுவரை வழங்கப்படாதது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய ஜல்சக்தி இயக்கம், மாநிலத்தைக் கேட்டுக்கொண்டது.

2020-21 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கேரளாவிற்கு ரூபாய் 404.24 கோடியை மத்திய அரசு   ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668438

**********************


(Release ID: 1668677)